மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
10 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
10 hour(s) ago
சாத்துார்: சாத்துார் சிவன் கோயில் கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்த வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.சிதம்பரேஸ்வரர் கோயில் என அழைக்கப்படும் சிவன் கோயில் 600 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இக்கோயில் முன்பு தெப்பக்குளம் அமைந்துள்ளது.சிதம்பரேஸ்வரர் கோயில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. முற்றிலும் கற்களால் கட்டப்பட்ட இந்த கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 20ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக கோயில் சுற்றுச்சுவர் தெப்பக்குள சுவர்களில் செடி கொடிகள் வளர்ந்து சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது.கோயில் உள்ளே வரையப்பட்ட ஓவியங்கள் மற்றும் எழுதப்பட்ட திருவாசகம் பாடல்கள் சேதம் அடைந்து காணப்படுகிறது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் கோயிலில் நடைபெற வேண்டும்.இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகள் ஆவதால் விரைந்து இக்கோயில் தெப்பக்குளம், கோயில் சுற்றுச்சுவர்,வளாகத்தையும் சிலைகளையும், துாண்களையும் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்திட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் முன் வர வேண்டுமென சிவ பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
10 hour(s) ago
10 hour(s) ago