உழவர் பாதுகாப்பு திட்ட நிதி பயனாளிகள் தேர்வு முகாம்
ஸ்ரீவில்லிபுத்துார் : முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி, திருமணம், இயற்கை மரணம், விபத்து நிவாரணம், ஈமச்சடங்கு, தற்காலிக இயலாமை ஓய்வூதியும் ஆகியவற்றுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகாவில் உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை வைத்திருந்து தகுதியுள்ள பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்க நடப்பு நிதி ஆண்டில் ரூ.9. 56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதில் 22 சதவீத நிதி மட்டுமே பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் மீதி தொகை செலவிடப்படாமல் உள்ளது. எனவே, தகுதி உள்ள பயனாளிகளை தேர்வு செய்து நூறு சதவீத நிதியையும் செலவிட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.இதற்காக ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா அலுவலகத்தில் மார்ச் 4ல் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை வைத்திருக்கும் பயனாளிகள் விண்ணப்பித்து நிதி உதவி பெற வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.