உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துார் நீராவிப்பட்டி கண்மாயில் மதகு சேதம் சீரமைக்க வலியுறுத்தும் விவசாயிகள்

சாத்துார் நீராவிப்பட்டி கண்மாயில் மதகு சேதம் சீரமைக்க வலியுறுத்தும் விவசாயிகள்

சாத்துார்: சாத்துார் ஊராட்சி ஒன்றியம் நீராவிப்பட்டி கண்மாயில் சேதமடைந்த மதகை பொதுப்பணித் துறையினர் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.வெம்பக்கோட்டை அணையில் இருந்து வரும் தண்ணீர் பெரிய கொல்லப்பட்டி கண்மாயை நிரப்பி விட்டு நீராவிப்பட்டி கண்மாய்க்கு செல்லும். மேலும் கோவில்பட்டி பகுதியில் பெய்து வரும் மழை நீரும் நீராவி பட்டி கண்மாயை வந்தடைகிறது.இக்கண்மாய் பாசனத்தை நம்பி பல நுாறு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. நீராவிப்பட்டி பகுதி முழுவதும் மக்கள் விவசாய பணிகளை நம்பியே உள்ளனர். நீராவி பட்டி கண்மாயில் ஐந்து மதகுகள் உள்ளன. அவற்றில் 2வது மதகு கடந்த ஆண்டு கண்மாய் நிரம்பிய போது தண்ணீர் புகுந்ததால் திடீரென உடைந்தது.இதனால் 2வது மதகு மூலம் பாசன வசதி பெற்ற விளைநிலங்கள் விவசாயப் பணிகள் எதுவும் இன்றி தற்போது தரிசாக கிடக்கின்றன. தற்போது கோடைகாலத்தில் பெய்த மழை காரணமாக நீராவிப்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் வந்துள்ளது. இருந்த போதும் இந்த தண்ணீர் போதுமான அளவு இல்லாததால் நீராவிப்பட்டி, சுற்றுப்பகுதிகளில் நெல் விவசாய பணிகள் நடக்காமல் உள்ளன.மேலும் தற்போது இந்த பகுதி விவசாயிகள் கண்மாய் பகுதியில் வெள்ளரி நடவு செய்து அதனை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். வரும் காலத்தில் நீராவி பட்டி பகுதியில் விவசாய பணிகளை செய்ய இந்த கண்மாயில் உள்ள உடைந்து போன 2வது மதகை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் நீர்வள ஆதாரத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை