உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பழுதான மின்சாதனங்களை உடனடியாக மாற்ற வேண்டும் :மின் விபத்துக்களை தவிர்க்க அறிவுரை

பழுதான மின்சாதனங்களை உடனடியாக மாற்ற வேண்டும் :மின் விபத்துக்களை தவிர்க்க அறிவுரை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தரமான ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டும். பழுதான மின்சாதனங்களை உடனடியாக மாற்ற வேண்டும் என மின் விபத்துக்களை தவிர்க்க மின்வாரியம் அறிவுரை வழங்கி உள்ளது.திருநெல்வேலி தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங் செய்திக்குறிப்பு: சமீப காலமாக மின் விபத்து ஏற்படுவது அதிகரித்துள்ளது. காற்று, மழைக்காலங்களில் மின் மாற்றிகள், மின்கம்பங்கள், மின் கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருந்தால் அதன் அருகே செல்லக்கூடாது.உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதை தொட முயற்சிப்பதோ கூடாது. அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின்வாரிய அலுவலர்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின்கம்பிகளை தொடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.மழையின் போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு இருக்குமாயின் அப்பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்து. மின்கம்பங்கள், ஸ்டே வயர்களில் ஆடு மாடுகளை கட்டுவதோ, பந்தல்களாக பயன்படுத்துவதோ, மின்கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்துவதோ கூடாது.மின் நுகர்வோர் இருப்பிடத்தில் ஏற்படும் மின் விபத்துக்களை தவிர்க்க அனைத்து மின் இணைப்புகளிலும் மின் கசிவு தடுப்பு கருவியை பொருத்த வேண்டும். மின் வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்தகாரர்கள் மூலம் செய்ய வேண்டும். தரமான ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டும். பழுதான மின்சாதனங்களை உடனடியாக மாற்ற வேண்டும்.மின்பாதை அருகில் நீளமான பொருட்களை கையாள்வதை தவிர்க்க வேண்டும். வாகனங்களை மின்பாதையின் கீழ் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். மின்தடை தொடர்பான புகார்களுக்கும், இயற்கை இடர்பாடுகளின் போது அவசர கால உதவிக்கும், மின் வினியோகம் சம்மந்தமான அனைத்து சேவைகளுக்கும் மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை மையத்தை 94987 94987 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ