மேலும் செய்திகள்
அகற்றப்பட்ட மணல் ரோட்டிலேயே குவிப்பு
22-Feb-2025
சாத்துார்: சாத்துார் சர்வீஸ் ரோட்டில் குவிந்து வரும் மணலால் விபத்துஅச்சம் நிலவி வருவதால் அவற்றை அகற்ற வேண்டும். சாத்துார் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் மழை நீர் ஓடியதால் சாலையின் ஓரத்தில் மணல் குவிந்து உள்ளது. இந்த மணல் அருகில் உள்ள மழைநீர் வடிகால் துவாரத்தில் அடைத்திருப்பதால் மழைநீர் செல்வதை தடுப்பதோடு ரோட்டிலேயே குளம் போல் மழை நீர் தேங்கும் நிலை உள்ளது.இதனால் டூவீலர்களில் செல்பவர்கள் வழுக்கி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். நான்கு சக்கர வாகனங்களும் திடீரென பிரேக் போடும்போது பிரேக் பிடிக்காமல் முன்னால் செல்லும் வாகனங்கள் மீது மோதி நிற்கும் நிலை உள்ளது. எனவே மணலால் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் முன் மணலை அகற்ற வேண்டும்.
22-Feb-2025