உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்

சிவகாசி: சிவகாசியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்ட முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயசீலன், மேயர் சங்கீதா, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன். எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் சிறுகுளம் கண்மாயில் நடைமேடை அமைக்கும் பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து சிவகாசி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், வெடி விபத்தில் காயமடைந்த 10 நபர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது.மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், திட்ட இயக்குநர் தண்டபாணி, கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஒன்றிய துணைத் தலைவர் விவேகன் ராஜ், தாசில்தார் வடிவேல் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை