உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே பட்டாசு கடைகளுக்கு உரிமம்

தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே பட்டாசு கடைகளுக்கு உரிமம்

சிவகாசி, : அனைத்து மாநில அரசுகளும் தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பட்டாசு கடைகளுக்கான உரிமத்தை வழங்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறினார்.சிவகாசியில் நடந்த பட்டாசு வணிக கண்காட்சியில் பங்கேற்ற எம்.பி., மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது,பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் எவ்வளவு முக்கியமோ, அது போலவே பட்டாசு விற்பனையாளர்களின் பாதுகாப்பும் முக்கியம். பட்டாசு விற்பனை கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் முக்கிய பிரச்னையாக உள்ளது.அனைத்து மாநில அரசுகளும் தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பட்டாசு கடைகளுக்கான உரிமத்தை வழங்க வேண்டும். உரிமம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், வியாபாரம் பாதிக்கப்படுவதுடன், சிவகாசி பட்டாசு தொழிலுக்கு சிக்கல் ஏற்படுகிறது.பா.ஜ., ஆட்சிக்கு வந்ததிலிருந்து பட்டாசு தொழிலுக்கான பிரச்னை தொடர்ந்து வருகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலத்திற்கு ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை