உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மழையால் அணைந்தது காட்டூத்தீ

மழையால் அணைந்தது காட்டூத்தீ

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால் கடந்த நான்கு நாட்களாக எரிந்த காட்டுத் தீ அணைந்ததால் வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மலை உச்சி பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீ பல கிலோமீட்டர் தூரத்திற்கு பரவியது. வனத்துறையினர், மலைவாழ் மக்கள், கொண்ட குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு 9:00 மணி முதல் செண்பகத் தோப்பு மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக காட்டுத்தீ இயற்கையாகவே அணைந்தது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை