உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பார்முலா கார் பந்தயம்: எந்த ஜோசியர், யாருக்கு உத்தரவாதம் முன்னாள் அமைச்சர் பேட்டி

பார்முலா கார் பந்தயம்: எந்த ஜோசியர், யாருக்கு உத்தரவாதம் முன்னாள் அமைச்சர் பேட்டி

விருதுநகர் : பார்முலா கார் பந்தயம் நடக்கும் இடத்தை எந்த ஜோசியர் எழுதி கொடுத்து, யாருக்கு கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்ற நடத்துகின்றனர் என்பது தெரியவில்லை, என விருதுநகரில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: மத்திய அரசு வழங்கும் 90 சதவீத நிதியை கேட்டு பெறாமல் நிதி வராததால் சம்பளம் கொடுக்க முடியவில்லை என தமிழக அரசு கூறுவது தவறு. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32 ஆயிரம் கோடி பட்ஜெட் அறிவித்தனர். இதில் ரூ.20 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் இருந்து வர வேண்டியுள்ளது. அமைச்சர் உதயநிதி ரசிகர் மன்ற வேலையை ஒதுக்கி வைத்து விட்டு டில்லி சென்று நிதியை பெற்று திரும்ப வேண்டும். ஆசிரியர்கள் வயிறு எரிந்தால் அரசாங்கம் அரை நாள் கூட தாங்காது.பார்முலா கார் பந்தயம் நடக்கும் இடத்தை எந்த ஜோசியர் எழுதி கொடுத்து, யாருக்கு கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்ற நடத்துகின்றனர் என தெரியவில்லை. இந்த பந்தயத்திற்கான செலவுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி