மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
9 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
9 hour(s) ago
விருதுநகர்: ராஜபாளையம் அருகே முகவூரைச் சேர்ந்த சுமதி 39. இவரின் மகனான முதல் தலைமுறை பட்டதாரி மாணவர் ஆத்தியப்பனுக்கு உதவித்தொகை கிடைத்திருப்பதாக கூறி அலைபேசி மூலம் வங்கி கணக்கில் இருந்து ரூ. 4199 திருடப்பட்டுள்ளது.ராஜபாளையம் அருகே முகவூரைச் சேர்ந்தவர் சுமதி இவரின் மகனான முதல் தலைமுறை பட்டதாரி மாணவர் ஆத்தியப்பன். சுமதியின் அலைபேசிக்கு ஜூன் 23 மதியம் 1:00 மணிக்கு 87439 23935 என்ற எண்ணில் இருந்து வந்த அழைப்பில் பேசிய ராஜ்குமார் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், ஆத்தியப்பன் உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளதாகவும் கூறினார். வங்கி கணக்கில் ரூ.4 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தால் உதவித்தொகை ரூ.28,500 கிடைக்காது என தெரிவித்துள்ளார்.இதை நம்பிய சுமதி, சகோதரி பொன்னுத்தாயிடம் தெரிவித்து, ராஜ்குமார் அனுப்பிய க்.யூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்தவுடன் வங்கி கணக்கில் இருந்த ரூ.4199 திருடப்பட்டது. இச்சம்பவம் குறித்து விருதுநகர் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago