உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமடைந்து ஆபத்தான நிலையில் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடம்; அச்சத்தில் மாணவர்கள்

சேதமடைந்து ஆபத்தான நிலையில் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடம்; அச்சத்தில் மாணவர்கள்

நரிக்குடி: நரிக்குடி விடத்தாக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். சீரமைக்க பெற்றோர் வலியுறுத்தினர். நரிக்குடி விடத்தாக்குளத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை நடைபெறுகிறது. இதில் 150 க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஒருங்கிணைந்த பள்ளி வளாகம் கட்ட ரூ. 1 கோடியே 61லட்சம் மதிப்பில் 8 ஆண்டுகளுக்கு முன் கட்டடம் கட்டப்பட்டது. கட்டடம் தரம் இல்லாமல் கட்டப்பட்டதால் சிமென்ட் பூச்சு பெயர்ந்து, கம்பிகள் வெளியில் தெரிகின்றன. அவ்வப்போது சிமென்ட் பூச்சு உதிர்ந்து விழுவதால், மாணவர்கள் அச்சத்தில் படிக்கின்றனர்.குடிநீர் பைப்புகள் உடைந்து தண்ணீர் வசதி இன்றி உள்ளதால், மாணவர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதைத்தொடர்ந்து பெற்றோர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தயங்குகின்றனர். திருச்சுழி, நரிக்குடி பள்ளிகளுக்கு அனுப்ப 6, 12 கி. மீ., செல்ல வேண்டி இருப்பதால் வேறு வழி இல்லாமல் இப்பள்ளியிலே மாணவர்களை படிக்க அனுப்புகின்றனர்.பள்ளி திறக்க உள்ள நிலையில் கட்டடத்தின் உறுதி தன்மையை குறித்து பெற்றோர் கவலை தெரிவித்தனர். விபத்து அச்சம் இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர். மாணவர்களின் நலன் கருதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ