உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மனநலம் பாதித்த சிறுமிக்கு தொந்தரவு: மூன்று பேர் கைது

மனநலம் பாதித்த சிறுமிக்கு தொந்தரவு: மூன்று பேர் கைது

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த நபருக்கு 2 பெண், ஒரு ஆண் குழந்தைகள். மூன்று பேரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். இவரது மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி ஐந்து ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனார். குழந்தைகளின் தந்தையும் ஓராண்டுக்கு முன் இறந்தார்.தென்காசி காப்பகத்தில் படித்த 15 வயது சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், ஏப்., 18ல் உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். மே 4ம் தேதி, சிறுமியின் உடைகள் கசங்கி இருந்தன.விசாரித்தபோது, அதே ஊரை சேர்ந்த முருகன், 55, தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்தார் என்றும், தொடர்ந்து முன்னாள் ஊராட்சி செயலர் பாண்டியராஜ், 47, ஜவகர், 45, தேவராஜ், 74, ஆகியோர் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் சிறுமி தெரிவித்தார்.அருப்புக்கோட்டை மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் முருகன், பாண்டியராஜ், ஜவகரை கைது செய்தனர். தலைமறைவான தேவராஜை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
மே 09, 2024 11:56

கைது செய்து ஒரு பிரயோஜனமும் இல்லை ஓடவிட்டு என்கவுண்டர் செய்யவேண்டும் ஆனால் இதுபோன்ற வழக்குகள் எக்காலத்திற்கும் நீதிமன்றம் செல்லக்கூடாது சென்றால் அவ்வளவுதான், வாய்தா, வாய்தா, மீண்டும் வாய்தா என்று கொடுத்து, முடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் நிரூபணமாகாததால், இந்த நீதிமன்றம் அவர்களை விடுவிக்கிறது என்று விடுவிக்கும் இதெல்லாம் தேவையா? ஓடவிட்டு என்கவுண்டர் Chapter close


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ