உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நான் குறுநில மன்னன் தான்; நீ பல கட்சி மாறியவன் மாபா பாண்டியராஜனை ஒருமையில் விளாசிய ராஜேந்திர பாலாஜி

நான் குறுநில மன்னன் தான்; நீ பல கட்சி மாறியவன் மாபா பாண்டியராஜனை ஒருமையில் விளாசிய ராஜேந்திர பாலாஜி

சிவகாசி:நான் குறுநில மன்னன் தான், பல கட்சி மாறி வந்த நீ அதைப்பற்றி பேசக்கூடாது என மாபா பாண்டியராஜனை மறைமுகமாக தாக்கி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.சிவகாசியில் அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: கட்சியில் மரியாதை இல்லை எனக்கூறும், நீ இந்த கட்சிக்கு என்ன செய்தாய். உச்ச நீதிமன்றத்தில் எனது வழக்கு நிலுவையில் உள்ளது. சி.பி.ஐ., வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இவ்வளவு பிரச்னைக்கு மத்தியிலும் நான் கட்சி பணியாற்றி வருகிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியை பின்பற்றி பழனிசாமி தலைமையில் வழிநடப்பவன். வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் இதே கட்சியில் இருப்பவன்.லண்டனில் படித்தவன் என்னை குறுநில மன்னன் என்கிறான். குறுநில மன்னன் தான் நான். என்னுடன் இருப்பவர்கள் வாளேந்தி வருவார்கள். எங்களை அழிக்க, ஒடுக்க நினைப்பவர்களை பார்த்துக் கொண்டிருக்க நாங்கள் பேடிகள் அல்ல. தைரியமாக எதிர்த்து நிற்போம்.தி.மு.க., தான் எங்கள் எதிரி என பழனிசாமி கூறியுள்ளார். நீ ஏன் குறுக்கே வருகிறாய். போகிற போக்கில் அடித்து தள்ளி விடுவேன். நான் எம்.ஜி.ஆரின் தொண்டன். ஒரே கட்சியில் உள்ளேன். என் உடம்பில் அ.தி.மு.க., ரத்தம் ஓடுகிறது. உனக்கு எந்த ரத்தம் ஓடுகிறது.முதலில் காங்கிரஸ், அடுத்து த.மா.கா., பா.ஜ.,, தே.மு.தி.க., அ.தி.மு.க., ஓ.பி.எஸ்., அணி, தற்போது மீண்டும் அ.தி.மு.க., வெட்கமாக இல்லையா உனக்கு. நீ என்னுடன் போட்டி போடுகிறாயா.என்னுடன் இருந்தவர்கள் என்னை எதிர்த்தாலும் அவர்களை மதிப்பேன். ஒரு வழக்கு போட்டாலே நீ அடுத்த கட்சிக்கு மாறி விடுவாய். எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என பொதுச் செயலாளர் சொன்னதன் அடிப்படையிலேயே வந்தவர், போனவர் என எல்லோரையும் சேர்த்து செல்கிறோம்.ஜெயலலிதாவை நீ அவதூறாக பேசிய வீடியோ உள்ளது. நீ எத்தனை பேரின் காலை பிடித்தாய். என்னைப் பற்றி பேசுவதற்கு உனக்கு என்ன தகுதி உள்ளது. நல்ல ஆம்பளை என்றால் விருதுநகரில் சொல்லி இருக்க வேண்டும். சென்னைக்கு ஓடிப்போய் சொல்லி உள்ளாய்.என்னோடு இருப்பவர்களை கோபம் வந்தால் அடித்து விடுவேன். உண்மையான அ.தி.மு.க., தொண்டர்களுக்கு நான் கட்டுப்படுவேன். என்னை பகைத்துக் கொண்டு விருதுநகரில் உன்னால் என்ன செய்ய முடியும். என்ன வந்தாலும் பழனிசாமியின் தொண்டனாக நான் இருப்பேன். நீ ஓடி விடுவாய், இவ்வாறு அவர் பேசினார்.இரு நாட்களுக்கு முன் விருதுநகரில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவிக்க முயன்ற நிர்வாகியை ராஜேந்திரபாலாஜி அடித்தார். அந்த நிகழ்ச்சியில் பாதியில் சென்ற மாபா பாண்டியராஜன் சென்னையில் வேறு நபரிடம் பேசிய ஆடியோ வெளியானது. அதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னன் போல் செயல்படுகிறார் என கூறியிருந்தார்.இதனைத் தொடர்ந்து நேற்று நடந்த அ.தி.மு.க., கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரை கடுமையாக தாக்கி பேசியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை