உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை

நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை

சிவகாசி : சிவகாசி மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மக்களின் சிரமத்தை தடுப்பதற்காகவும் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மேயர் சங்கீதா அடையாள அட்டை வழங்கி கூறுகையில், மாநகராட்சியில் நடைபாதையில் கடைகள் வைத்திருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு மக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியது. எனவே நடைபாதை வியாபாரிகளுக்கு என தனி இடம் ஒதுக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக மாநகராட்சியில் நடைபாதை வியாபாரிகள் குறித்து சர்வே எடுக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக 199 நடைபாதை வியாபாரிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மீதமுள்ள நடைபாதை வியாபாரிகள்கணக்கெடுக்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படும். இவர்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகள் தேர்வு செய்யப்படும்.தொடர்ந்து மாநகராட்சி, போலீசார், நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் கொண்ட கமிட்டி உருவாக்கப்படும். இவர்கள் நகரில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தை தேர்வு செய்து அங்கே கடைகள் வைப்பதற்கு பரிந்துரை செய்வர். அதன்படி நடைபாதை வியாபாரிகள் அங்கே தங்களது கடையை வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். துணை மேயர் விக்னேஸ்வரிகமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ