உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பா.ஜ.,வை விமர்சித்தால் தேசவிரோதி என்று கூறும் ஆட்சி நடக்கிறது

பா.ஜ.,வை விமர்சித்தால் தேசவிரோதி என்று கூறும் ஆட்சி நடக்கிறது

சிவகாசி : பா.ஜ.,வை விமர்சித்தால் தேசவிரோதி என்று கூறும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது, என மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார்.சிவகாசியில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, லோக்சபா தொகுதிகளில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கூறுபவர்கள் காஷ்மீரில் சட்டசபை தேர்தலை ஏன் நடத்தவில்லை. மத்திய அமைச்சராக உள்ள ஓய்வு பெற்ற ராணுவ தளபதி வி.கே.சிங்கை வேட்பாளராக அறிவித்தும் அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அதற்கு மோடியின் எதிர்ப்பு அலையே காரணம். டில்லியின் துணை முதல்வர் 13 மாதங்களாக சிறையில் உள்ளார். ஜார்க்கண்ட் முதல்வரான பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை, ரவுடியைப் போல தேடிப்பிடித்து அமலாக்கத்துறை கைது செய்கிறது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, 8 மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை