உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வேறு வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை

வேறு வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் இரு வேறு சம்பவங்களில் நோயால் பாதிக்கப்பட்ட இருவர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் தன்னை மனிதாபிமானத்துடன் அடக்கம் செய்ய வேண்டும் என போலீசாருக்கு முதியவர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் பட்டி குலாலர் தெருவை சேர்ந்தவர் குருசாமி மனைவி பார்வதி, 58, சுகர், பிரஷர், நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் திரு முக்குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.மற்றொரு சம்பவம், ஸ்ரீவில்லிபுத்தூர் சித்தாலம்புத்தூரில் மரத்தில், நேற்று காலை 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் முதியோரின் உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.அப்போது அவரது சட்டை பையில் ஒரு கடிதம் இருந்தது. அதில், உயர்திரு காவல்துறை அவர்களுக்கு நான் எழுதும்கடிதம், நான் ஒரு ஏழை, எனக்கு உறவுக்காரர்கள் யாருமில்லை. நான் ஒரு அனாதை. என் உடம்பில் பெரும் வியாதி பரவி உள்ளது. பலமுறை ஆஸ்பத்திரியில் பார்த்தேன். குணமாகவில்லை. வியாதியின் வலி என்னால் பொறுக்க முடியவில்லை. அதனால்நானே என் உயிரை மாய்த்துக் கொண்டேன். மேல்முறையீடு தேவையில்லை, மனிதாபிமானத்தோடு என்னை அடக்கம் செய்யவும். இது என் தலைவிதி-என குறிப்பிடப்பட்டிருந்தது.இறந்து போன முதியவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா இளமானூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்,70, என்பது தெரிய வந்தது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக இளையாங்குடி போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இரு வேறு சம்பவங்களில் நோயால் பாதிக்கப்பட்ட இருவர் தற்கொலை செய்து கொண்டது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ