மேலும் செய்திகள்
இடிந்து கிடக்கும் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி
05-Sep-2024
சாத்துார்: சாத்துாரில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா சைக்கிளில் வால்டியூப் இல்லாத நிலையில் பல கிலோமீட்டர் தள்ளியபடி மாணவர்கள் வீட்டிற்கு சென்றனர்.சாத்துார் பள்ளிகளில் நேற்று ப்ளஸ் 1 மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட பல சைக்கிள்களில் முன்புறம் இருக்க வேண்டிய கூடை, ஸ்டான்ட் இல்லை, மேலும் சைக்கிள் டியூப்பில் காற்றடைக்க பயன்படும் வால்டியூப் இல்லை. இதனால் மாணவர்கள் தாங்கள் பெற்ற சைக்கிளை வீடுகளுக்கு காற்று இல்லாமல் தள்ளிக் கொண்டு நடந்து சென்றனர்.விலையில்லா சைக்கிள் கொடுக்கும்போதே அனைத்து சைக்கிளும் தரமாக உள்ளதா என பரிசோதனை செய்து ஓட்டிச் செல்லும் நிலையில் மாணவர்களுக்கு தர வேண்டும். ஏனோ தானோ என்று சைக்கிளை வழங்காமல் தரமாக வழங்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
05-Sep-2024