உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

விருதுநகர்: தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் விஜயமுருகன் கலெக்டர் ஜெயசீலனிம் அளித்த மனு:மாவட்டத்தில் வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் பகுதிகளில் 24 ஆயிரம் ஏக்கர் தென்னை பயிர் செய்துள்ளனர். தற்போது நிலவும் வெப்ப அலையால் வெள்ளை ஈ, வாடல் நோய் தாக்குதல் அதிகரித்து தென்னை மரத்தின் குலைகள் முதல் குருத்து வரை பாதித்து மரம் காய்ப்பு திறன் அற்று உள்ளது.இதனால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் கருகி அழிந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், தோட்டக்கலைத்துறையும் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து ஒரு தென்னை மரத்திற்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணம் வழங்கி, மீதமுள்ள மரங்களை பாதுகாக்க ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க வேண்டும், என்றார்.தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை