குறைவான தவணை தொகைகளில் காப்பீடு
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755, பீரீமியத்தில் ரூ.10 லட்சம் அல்லது ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். விண்ணப்ப படிவம், அடையாள, முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித பயன்பாடுமின்றி தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், பயோமெட்ரிக் சாதனம் பயன்படுத்தி வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த காப்பீட்டில் சேர்ந்து கொள்ளலாம். சேமிப்பு கணக்கு துவங்க ஆதார் எண், தொலைபேசி எண், ரூ.200 ஆகியவை போதுமானது. பிற காப்பீடு திட்டம் வைத்திருப்பவர்களும், இந்த காப்பீட்டில் பதிவு செய்துகொள்ளலாம், என்றார்.