உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச மாநாடு

கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச மாநாடு

ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை ஆங்கிலத்துறை கலை, சிறப்பு கல்வி பள்ளி சார்பில் சர்வதேச மாநாடு, 'மனிதவியல் மற்றும் சமூக அறிவியலில் புதிய மாற்றங்கள் என்ற தலைப்பில் நடந்தது.வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சசி ஆனந்த், துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். ஆராய்ச்சி துறை இயக்குனர் பள்ளிகொண்ட ராஜசேகரன் வரவேற்றார். சிறப்பு கல்வி பள்ளி தலைவர் பாண்டியராஜன் நிகழ்ச்சி குறித்து விளக்கமளித்தார்.அமெரிக்க ஜேம்ஸ் மெடிசன் பல்கலை பேராசிரியர் சுஹில் மித்தல் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். லண்டன் பாத் பல்கலை பேராசிரியர் சாமந்தா கர்லே, மலேசிய தொழில்நுட்ப பல்கலை பேராசிரியர் கார்த்தியாயினி, சவுதி அரேபியா பல்கலை பேராசிரியர் சாஹ்ரா உட்பட பல்வேறு பல்கலைபேராசிரியர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஆங்கிலத் துறை தலைவர் அரவிந்த் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ