உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறுமிக்கு தொல்லை தொழிலாளிக்கு சிறை

சிறுமிக்கு தொல்லை தொழிலாளிக்கு சிறை

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர்மாவட்டம் காரியாபட்டியில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த கட்டட தொழிலாளி விஜய் 26, என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.காரியாபட்டியை சேர்ந்தவர் விஜய். இவர் 2022ல் தனது நண்பரின் 16 வயது சகோதரியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். காரியாபட்டி போலீசார் விஜயை கைது செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ