மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
8 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
8 hour(s) ago
நரிக்குடி,: நரிக்குடி, பனைக்குடி, காரியாபட்டி பகுதியில் விளையும் வெள்ளரிப்பிஞ்சுகள் கோவையில் கிராக்கி இருப்பதால் வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். அலைச்சல் மிச்சமாவதுடன் நல்ல வருவாய் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடையில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் முக்கியமானதாக வெள்ளரி சாகுபடி இருந்து வருகிறது. வெயில் காலத்தில் வெள்ளரிப்பிஞ்சுகளுக்கு நல்ல கிராக்கி இருக்கும். காரியாபட்டி, நரிக்குடி பகுதியில் காலத்திலும், கோடையிலும் வெள்ளரி பயிரிட்டு வருகின்றனர். காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட்டில் எப்போதும் விற்பனை இருக்கும். சுவை மிகுந்ததாக இருப்பதால் இப்பகுதி வெள்ளரிப்பிஞ்சுகளுக்கு நல்ல கிராக்கி இருந்து வருகிறது. இப்பகுதியில் அதிக அளவில் விளைச்சல் இருப்பதால் அருப்புக்கோட்டை, விருதுநகர், திருமங்கலம், மதுரை உள்ளிட்ட ஊர்களில் விற்பனை செய்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து இப்பகுதி வெள்ளரிப்பிஞ்சுகள் கோவையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ருசியாக இருப்பதால் இப்பகுதி வெள்ளரிப்பிஞ்சுகளுக்கு கோவையில் நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது ஏராளமான வியாபாரிகள் இப்பகுதி விவசாயிகளிடம் மொத்தமாக விலை பேசி வாங்கி செல்கின்றனர். ஓரளவிற்கு வருவாய் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தாண்டவன், விவசாயி, கூறியதாவது: வெள்ளரி விவசாயம் குறுகிய கால பயிராக இருப்பதுடன், நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. முன் இப்பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்ட்களில் அலைந்து திரிந்து விற்பனை செய்தோம். தற்போது இப்பகுதி வெள்ளரிப்பிஞ்சுகளுக்கு கோவையில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்வதால், அலைச்சல் மிச்சமாகிறது. ஒரு பிஞ்சு ரூ. 2 க்கு வாங்கி செல்கின்றனர். நல்ல விளைச்சல் ஏற்பட்டு வருவாய் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது.
8 hour(s) ago
8 hour(s) ago