உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் சிரமம்

நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் சிரமம்

நரிக்குடி : நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் கிடையாது. வெயில், மழைக்கு திறந்த வழியில் நிற்க வேண்டியுள்ளது. காத்திருப்பு அறை கிடையாது. குடிநீர் வசதி இல்லை. வெயில் காலத்தில் பயணிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களின் நேரம் பார்க்க கால அட்டவணை கிடையாது. எப்போது பஸ் வரும் என்கிற விவரம் தெரியாமல் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.வெயில் மழைக்கு கடை ஓரங்களில் ஒதுங்குகின்றனர். இடையூறு ஏற்படுவதாக உரிமையாளர்கள் சத்தம் போடுகின்றனர். பயணிகளுக்கு தர்ம சங்கடம் ஏற்படுகிறது. திறந்தவெளியில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. கண்மாய் கரையில் உள்ள நிழற்குடையை சுற்றி ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.இடையூறு ஏற்படுத்துவதால் பயணிகள் அங்கு உட்கார முடியாமல் தவிக்கின்றனர். போதிய நிதி இல்லாததால் உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. சுற்றியுள்ள கிராமங்களுக்கு நரிக்குடி முக்கிய ஊராக இருந்து வருகிறது. ஏற்கனவே ஊராட்சிக்கு சொந்தமான சில வணிக வளாக கடைகள் உள்ளன.அத்துடன் கூடுதல் வணிக வளாக கடைகள் கட்டி வாடகை வசூல் செய்து தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ