உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்ட மானியம் வழங்கல் துவக்கம்

பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்ட மானியம் வழங்கல் துவக்கம்

விருதுநகர், : விருதுநகரில் காதி, கிராமத் தொழில்கள் ஆணையம், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம் மூலம் பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கான மானியம் ரூ. 270.77 கோடி வழங்கல் ஆணையத் தலைவர் மனோஜ் குமார் தலைமையில் நடந்தது. இதன் மூலம் 9583 புதிய திட்டங்கள் துவங்கப்பட்டு 1 லட்சத்து 5 ஆயிரத்து 413 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.மூத்த நுாற்போருக்கு கதராடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். ஹிந்தி கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கும், மழைவாழ் மக்களில் தொழில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். கைவினைஞர்கள் காட்சிப்படுத்திய பொருட்களை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை