உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாய்ந்த நிலையில் மின் கம்பங்கள்: அச்சத்தில் மக்கள்

சாய்ந்த நிலையில் மின் கம்பங்கள்: அச்சத்தில் மக்கள்

நரிக்குடி: நரிக்குடி சுள்ளங்குடியில் உயர் மின் அழுத்த வயர் செல்லும் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.நரிக்குடி சுள்ளங்குடியில் மும்முனை மின்சாரம் செல்லும் மின் கம்பங்கள் மந்தை வழியாக செல்கின்றன. நாளடைவில் பலத்த காற்றுக்கு மின் கம்பங்கள் தொடர்ச்சியாக சாய்ந்துள்ளன. ஆங்காங்கே மின் வயர்கள் தொடும் தூரத்தில் உள்ளன. மந்தையில் அரசு டவுன் பஸ் திரும்பும் இடமாக உள்ளது. அறியாமையில் பஸ் லேசாக உரசினாலே மின்கம்பங்கள் முற்றிலும் சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.அதேபோல் விளை நிலங்களிலிருந்து அதிக அளவில் தானியங்களை டிராக்டரில் ஏற்றி செல்லும்போது மின் வயர் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாய்ந்துள்ள மின்கம்பங்களை சீரமைக்க வேண்டி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை கண்டு கொள்ளவில்லை.கோடை காலத்தில் கடும் மழை, சூறாவளி வீசினால் முற்றிலும் மின்கம்பங்கள் சாய்ந்து விபத்து நடக்கும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் சாய்ந்துள்ள மின்கம்பங்களை நேராக நிமிர்த்தி சீரமைக்க வேண்டும் என அக்கிராமத்தினர் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ