மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
1 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
1 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தன்மீது மாமியாரிடம் புகார் கூறிய மனைவி சுமிதாவை 21, கொலை செய்த கணவர் சரவணகுமாருக்கு 24,ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஸ்ரீவில்லிபுத்தூர் குலாளர் கல்லணை ஓடை தெருவை சேர்ந்தவர் சரவணகுமார், இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுமிதாவை 2014ல் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்தார். பின்னர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் சரவணகுமாரின் சகோதரி மாரியம்மாளுக்கு சொந்தமான பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். தனது மனைவி சுமிதாவையும் அங்கு அழைத்துச் சென்று வசித்து வந்துள்ளார்.2017ல் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துள்ளனர். அப்போது தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதாக தனது தாய் ஆவுடையம்மாளிடம் சுனிதா புகார் தெரிவித்துள்ளார். இதில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 2017 செப். 6 காலை, தனது கணவரின் வீட்டு கட்டிலில், வாயில் ரத்தம் வந்த நிலையில் சுமிதா இறந்து கிடந்துள்ளார். இக்கொலை தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் சரவணகுமாரை கைது செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் சரவணகுமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.
1 hour(s) ago
1 hour(s) ago