மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
10 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
10 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் கள்ளத்தனமாக மது விற்ற இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 110 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்துாரில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன்பாகவே காலை முதல் நகரின் பல்வேறு இடங்களில் தனி நபர்கள் மது விற்பனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுகிறது. இதையடுத்து டி.எஸ்பி. முகேஷ் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தொடர்ந்து போலீசார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர்.நேற்று முன் தினம் காலை 7:25 மணிக்கு கம்மாபட்டி காமராஜர் சிலை அருகில் வைத்து மது விற்பனையில் ஈடுபட்ட ஏமராஜன் 30,ஐ கைது செய்து அவரிடம் இருந்த 107 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.இதேபோல் ராஜாஜி ரோட்டில் காலை 7:45 மணிக்கு மது விற்பனையில் ஈடுபட்ட ராஜபாளையத்தை சேர்ந்த லட்சுமி காந்தன் 46, என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 10 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்து ஸ்டேஷன் பெயிலில் விடுவிக்கப்பட்டு வந்தனர். இனிமேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
10 hour(s) ago
10 hour(s) ago