மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
8 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
8 hour(s) ago
சாத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே நள்ளி சத்திரம் விலக்கில் லாரி கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். இருக்கன்குடிக்கு பாதயாத்திரை சென்ற இருவர் காயமடைந்தனர். தென்காசிமாவட்டம் வி.கே.புதுார் தாலுகா பலபத்திரராமபுரத்தை சேர்ந்தவர் கடற்கரைராஜ் ,55. இவர் உறவினர்கள் சிவகாசி ஆனைக்குட்டம் மகேஸ்வரி 42, மகேஸ்வரன் 39, ஆகியோருடன் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு நள்ளிசத்திரம் விலக்கில் மூவரும் சென்ற போது அவர்கள் பின்னால் கோவில்பட்டியில் இருந்து திருத்தங்கல் நோக்கி சென்ற லாரி மோதி ரோட்டின் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.லாரியில் வந்த திருத்தங்கல் மாரியப்பன்,பாதயாத்திரை பக்தர்கள் மகேஸ்வரன் ,மகேஸ்வரி படுகாயம் அடைந்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மாரியப்பன் பலியானார்.சிவகாசி திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் கோபிநாத் மீது சாத்துார் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
8 hour(s) ago
8 hour(s) ago