உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பால் வரத்தை அதிகரிக்க நடவடிக்கை; ஆவின் மேலாளர் தகவல்

பால் வரத்தை அதிகரிக்க நடவடிக்கை; ஆவின் மேலாளர் தகவல்

ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டத்தில் பால் வரத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் நிறுவன மேலாளர் அன்புராஜ் கூறியதாவது: வெயிலின் தாக்கத்தால் பால் வரத்து குறைவாக இருந்தது. கடந்த ஒரு சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்து வருவதால் படிப்படியாக பால் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. மழை தொடர்ந்தால் ஓரிரு வாரங்களில் பால்வரத்து அதிகமாகும். நேற்றைய நிலவரப்படி மாவட்டத்தில் 111 உற்பத்தியாளர் சங்கங்களிலிருந்து 12 ஆயிரத்து 700 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.மாடுகள் வளர்க்கும் ஆயிரம் விவசாயிகளுக்கு 25 மெட்ரிக் டன் கால்நடை கலப்பு தீவனம் வழங்கப்பட்டுள்ளது. விரிவாக்க அலுவலர்கள் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களை நேரடியாக சந்தித்து வருகின்றனர்.வெயிலின் தாக்கத்தால் மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும் அதனை காப்பாற்றி பால் உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும் டாக்டர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை மாடு உரிமையாளர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ