உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தாய், மகள் ரூ.79 லட்சம் கையாடல் கண்டுபிடிப்பு

தாய், மகள் ரூ.79 லட்சம் கையாடல் கண்டுபிடிப்பு

சாத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், பிரதமர் குடியிருப்பு திட்டத்தில், 79 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக, ஒப்பந்த பணியாளரான மகள் ரேவதி மற்றும் ஊராட்சி செயலரான தாய் தெய்வானை மீது, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.ரேவதி, 2020 முதல் பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் அவுட்சோர்சிங்கில் பணியாற்றினார். இவரது தாய் தெய்வானை, சடையம்பட்டி ஊராட்சி செயலராக பணிபுரிகிறார். இருவர் நடவடிக்கையில் சந்தேகம் வந்ததால், 2023 ஆக., முதல், பிரதமர் வீடு கட்டும் திட்ட தொகையை சரிபார்த்தபோது, முறைகேடு தெரிய வந்தது.தகுதி நீக்கம் செய்யப்பட்ட 76 பயனாளிகளின் பெயர்களை பயன்படுத்தி ரேவதி தன் தாய் தெய்வானையின் ஆலோசனையின்படி, உறவினர்கள் வங்கி கணக்கில் 79 லட்சம் ரூபாயை செலுத்தி, மோசடி செய்தது தெரிந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் புகாரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை