உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோசல்பட்டியில் ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை: அவதியில் மக்கள்

ரோசல்பட்டியில் ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை: அவதியில் மக்கள்

விருதுநகர், : விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியில் ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லாததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியில் ராஜீவ் காந்தி குடிநீர் திட்டம், தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. முன்பு சீராக வழங்கப்பட்டு வந்த நிலையில் கோடை நெருங்கும் போது 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் ஆனது. மே மாதத்தில் எப்போது குடிநீர் வரும் என்று மக்களுக்கு தெரியாது. ஒரு பகுதி மக்களுக்கு வரும், இன்னொரு பகுதி மக்களுக்கு வராது. ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லாத சூழலை ரோசல்பட்டி ஊராட்சியின் பல பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர்.ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லாததால் நகர் பகுதிகளுக்கு சென்று குடிநீர் பிடித்து வருவதும், லாரி குடிநீரை பிடித்து பயன்படுத்தி மக்கள் உள்ளனர். இப்பகுதி மக்கள் விலைக்கு வாங்கி குடிநீரை பயன்படுத்துவதால் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகின்றனர். இந்த ஊராட்சியின் மல்லி கிட்டங்கி தெரு, பாண்டியன் நகர், முத்தால் நகர், ஜக்கதேவி நகர், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ