மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
2 minutes ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
3 minutes ago
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு, காரியாபட்டியில் நீதித்துறை நடுவர் மற்றும் முன்சீப் நீதிமன்றங்களும், அருப்புக்கோட்டையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றமும், ராஜபாளையத்தில் சார்பு நீதிமன்றமும் ஜூலை 26ல் திறக்கப்பட உள்ளது. இதற்கான விழா அருப்புக்கோட்டையில் நடக்கிறது. வத்திராயிருப்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தில் தற்காலிகமாக நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது இதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு முடிவடைந்துள்ளது. இதேபோல் காரியாபட்டியிலும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், அருப்புக்கோட்டையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றமும், ராஜபாளையத்தில் சார்பு நீதிமன்றமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.இந்நிலையில் ஜூலை 26 ல் 4 நீதிமன்றங்களுக்கான திறப்பு விழா அருப்புக்கோட்டையில் நடக்கிறது. ஏற்பாடுகளை நீதித்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
2 minutes ago
3 minutes ago