| ADDED : ஜூலை 18, 2024 04:05 AM
விருதுநகர் : விருதுநகர் பட்டம்புதுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஹட்சன் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ், ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட கூடைப்பந்து மைதானம் திறந்து பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது.விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி, திருத்தங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ரிசர்வ் லைன் அரசு மேல்நிலைப்பள்ளி 3 இடங்களில் தலா ரூ.15 லட்சம் வீதம் மொத்தம் ரூ.45 லட்சத்திற்கு சமூக பொறுப்பு நிதியின் கீழ், கட்டப்பட்ட கூடைப்பந்து மைதானங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு மைதானத்திற்கும் 3 அரசு பள்ளிகள் வீதம் மொத்தம் 9 பள்ளிகளை தேர்ந்தெடுத்து, பள்ளிக்கு ஒரு கூடை பந்தாட்ட அணி உருவாக்கப்படும். அந்த அணியில் உள்ள மாணவர்கள் தினமும் காலை, மாலையில் பயிற்சி செய்து கூடைப்பந்து போட்டிக்கு தயார் செய்யப்படுவர். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். பட்டம்புதுாரில் கலெக்டர் ஜெயசீலன் திறந்து வைத்தார். 96 மாணவர்களுக்கு ஷூ, பந்துகள் வழங்கப்பட்டன.