உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நன்னீரால் நிறைந்த பச்சைமடம் ஊருணி

நன்னீரால் நிறைந்த பச்சைமடம் ஊருணி

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் பெய்துள்ள கோடை மழையால் குடியிருப்புகளிடையே கழிவுகள் இன்றி பச்சை மடம் ஊருணி நன்னீர் தேங்கி அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.மக்கள் பெருக்கத்தை அடுத்து அனைத்து பகுதியிலும் ராட்சத குழாய் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே குடியிருப்புகளை சுற்றி இருந்த ஊருணிகள் சாக்கடை குளமாக மாறி வரும் நிலையில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள பச்ச மடம் ஊருணி நிலத்தடி நீர் சேகரிப்பில் அனைவருக்கும் முன்னுதாரணமாக மாறி உள்ளது.இங்குள்ள குடியிருப்பு வாசிகள் இணைந்து சாக்கடை கழிவுகள் ஊருணியில் சேராத வகையில் ஷட்டர் அமைப்பை ஏற்படுத்தி மழை காலங்களில் வரும் கழிவு நீரை சாக்கடையில் அனுப்பிவிட்டு தண்ணீரை மட்டும் ஊருணியில் சேமிக்கும் முறையை ஏற்படுத்தியுள்ளனர். ராஜூக்கள் இளைஞர் சங்கத்தினர் முன்னெடுத்து செய்த இப்பணியை மாநில அரசும் இணைந்து மேற்கொண்டு துார்வாரி ஊருணியை சுற்றி நடைபாதையை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.தற்போதைய மழை காரணமாக ஊருணி நன்னீரால் நிறைந்து நிலத்தடி நீர்மட்டத்தை அதிகப்படுத்தி அனைவருக்கும் உதாரணமாக திகழ்ந்து வருகிறது.இந்நிலையில் இதை சுற்றி குடிமகன்கள் தொல்லையும், ஆக்கிரமிப்பாளர்களும், மீன்பிடிப்பு என்ற பெயரில் நடைபெறும் சச்சரவுகளுக்கும் நகராட்சி அதிகாரிகளும் போலீசாரும் தகுந்த தீர்வு காண வேண்டும் என்பதே இப்பகுதியினரின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை