மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
13 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
13 hour(s) ago
நரிக்குடி: நரிக்குடி பனைக்குடியில் இருந்து நாலுார் விலக்கு வரை செல்லும் ரோடு மழைக்கு அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்து வருவதால் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் விரும்புகின்றனர்.நரிக்குடி பனைக்குடியில் இருந்து கண்மாய் கரை வழியாக நாலுார் விலக்கு வரை செல்லும் 2 கி. மீ., தூரமுள்ள ரோடு சில மாதங்களுக்கு முன் போடப்பட்டது. கண்மாய் கரைக்கு கீழ் வயல் வெளியாக பள்ளமாக உள்ளது. சமீபத்தில் பெய்த கனமழைக்கு மழை நீர் பள்ளத்தில் வடிந்து மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது தார் ரோடு சேதமடைந்து கனரக வாகனங்கள் சென்றால் இடிந்து வாகனம் கவிழும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் டூவீலரில் வருபவர்கள் அரிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியாமல் ஓரமாக செல்ல முற்படும்போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.கரைகளை பலப்படுத்தி ரோடு அரிப்பு ஏற்படாமல் இருக்க பக்கவாட்டு சுவர் கட்ட வேண்டும். சுவர் கட்டினால் மட்டுமே மண் அரிப்புகளை தடுத்து ரோடு சேதம் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்க முடியும். திருப்புவனம் உள்ளிட்ட ஊர்களுக்கு இந்த வழியாக ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். ரோடு துண்டிக்கப்பட்டால் 10 கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மண் அரிப்பை தற்காலிகமாக சீரமைத்து, நிரந்தர தீர்வுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
13 hour(s) ago
13 hour(s) ago