மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
12 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
12 hour(s) ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஊராட்சி அலுவல கட்டடம் கட்ட எதிர்ப்பு வந்ததால் பணி பாதியில் நிறுத்தப்பட்டதுடன், பிரச்சினைக்கு முடிவு காணாமல் அதிகாரிகளின் மெத்தனத்தால் கிடப்பில் போடப்பட்டது.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது குல்லூர்சந்தை ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி அலுவலக கட்டடடம் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 30 லட்சம் நிதியில், ஆதிதிராவிடர் காலனி அருகில் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு கடந்த மாதம் அதற்கான டெண்டரும் விடப்பட்டது. பணி துவங்கப்பட்டு வானம் தோண்டிய நிலையில், அந்தப் பகுதியினர் அலுவலக கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.ஏற்கனவே பழைய ஊராட்சி ஒன்றிய கட்டடத்தை இடித்துவிட்டு அந்த இடத்திலேயே புதிய இடத்தை கட்டவும், இந்த இடத்தை வேறு ஏதாவது ஒரு பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ளலாம் என கூறி, கண்டனம் தெரிவித்தனர். தகவல் அறிந்த அருப்புக் கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். எதிர்ப்பு வந்ததால் வேறு ஒரு இடத்தை தேர்வு செய்யாமலும், பழைய சேதமடைந்துள்ள கட்டடத்தை இடித்து விட்டு அங்கு கட்ட நடவடிக்கை எடுக்காமலும், பணியை பாதியில் நிறுத்த கூறி விட்டனர்.ரோட்டின் அருகே 6 அடி ஆழத்தில் பில்லர்அமைக்க பள்ளம் தோண்டிய நிலையில், பணி நிறுத்தப்பட்டதால் அந்தப் பகுதியில் வந்து செல்வோருக்கு பள்ளத்தில் விழுந்து விடும் அபாயம் உள்ளது. குழியை மூடி வேறு இடத்தில் பணி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
12 hour(s) ago
12 hour(s) ago