மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
5 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
5 hour(s) ago
விருதுநகர்: விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் காத்திருக்கும் கட்டடத்தின் கூரை பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சேதமாகியுள்ளது. மேலும் பஸ் ஸ்டாண்ட் வாறுகால் முறையாக சுத்தம் செய்யப்படாததால் துார்நாற்றம் உண்டாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.விருதுநகரில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்துார், ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வந்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு அனுமதிக்கப்பட்டவர்களை காண்பதற்காக வருபவர்களும் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வருகின்றனர்.மேலும் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பழைய பஸ்டாண்டிற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அந்தந்த பகுதிகளுக்கு தேவைக்கேற்ப அரசு, தனியார் பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுவதால் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.இந்நிலையில் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் காத்திருக்கும் கட்டடத்தின் கூரை பூச்சுகள் பெயர்ந்து கம்பி வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இந்த பூச்சுகள் எப்போது வேண்டுமானாலும் பெயர்ந்து விழும் நிலையில் இருப்பதால் பயணிகள் அச்சத்துடன் அமருகின்றனர். இங்குள்ள வாறுகால்கள் முறையாக சுத்தம் செய்யப்படாததால் துார்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.இங்கு அமைக்கப்பட்ட மினரல் வாட்டர் பிளாண்ட் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதனை முறையாக பராமரிக்காமல் முகப்பு பகுதியில் புதியதாக வாட்டர் டேங்க் அமைத்து தினமும் வேனில் கொண்டு வரும் குடிநீரை நிரப்பி வருகின்றனர்.மேலும் கடைகள் முன்பு தகர சீட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் பயணிகள் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாமல் மழையில் நனைந்து கொண்டு பஸ்சிற்காக காத்திருக்க வேண்டியுள்ளது. விருதுநகர் பழைய பஸ்டாண்டின் பெயர் பலகை துருப்பிடித்து சேதமாகி சரிந்து விழும் நிலையில் உள்ளது.
5 hour(s) ago
5 hour(s) ago