மேலும் செய்திகள்
கோவை கலெக்டர் கொடுத்துள்ள வார்னிங் | Valparai | Landslides
01-Aug-2024 | 1
விருதுநகர்: விருதுநகர் ஆனைக்குழாய் பகுதியில் இருந்து கலைஞர் நகர் செல்லும் வழியில் குடிநீர் லீக் ஆகி வருவதால் அப்பகுதி மக்கள் வேதனையில் தவிக்கின்றனர்.நகர்ப்பகுதிகளை காட்டிலும் ஊரகப்பகுதிகளில் தான் தாமிரபரணி குடிநீர் அதிகளவில் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக ஊராட்சிகள் தோறும் மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு பம்பிங் செய்யப்பட்டு அங்கிருந்து மக்களின் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சில மாதங்களாக ஊரக பகுதிகளில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே உள்ளூர் நீராதாரங்கள் பாழான நிலையில் தான் வெளியூர் நீராதாரமான தாமிரபரணி குடிநீரை பயன்படுத்தும் சூழல் உள்ளது. இந்நிலையில் ஊரகப்பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் பைப்லைனில் பழுது ஏற்பட்டாலும் அதை சரி செய்யாமல் தவிர்த்து வருவதால் வரும் காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக மக்கள் புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என புலம்புகின்றனர். குடிநீர் பழுது ஏற்பட்டால் அதை சரி செய்வது ஊராட்சியா அல்லது குடிநீர் வடிகால் வாரியமா என்ற குழப்பம் உள்ளது. இந்த குழப்பத்தால் எந்த பயனும் இல்லை. குடிநீர் பிரச்னை தான் அதிகமாகும் சூழல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
01-Aug-2024 | 1