உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புகைப்பட கண்காட்சி துவக்கம்

புகைப்பட கண்காட்சி துவக்கம்

விருதுநகர் : விருதுநகர் தேசபந்து மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.கலெக்டர் ஜெயசீலன் தலைமையில், எம்.எல்.ஏ., சீனிவாசன், சிவகாசி மேயர் சங்கீதா முன்னிலையில், வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்து பார்வையிட்டனர்.மூன்றாண்டுகளில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், பணிகள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை குறித்து மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில், இந்த கண்காட்சி ஜூலை 15 முதல் 10 நாட்கள் நடக்கிறது. இதில் நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், வருமுன் காப்போம் திட்டம் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றிவேந்தன், சாத்துார் ஆர்.டி.ஓ., சிவக்குமார், நகராட்சி தலைவர் மாதவன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை