உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி துவக்கம்

5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி துவக்கம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பசுமை தமிழகம் இயக்கம் சார்பில் 5 லட்சம் மரக்கன்றுகளை நடும் நிகழ்வு துவங்கியது.விருதுநகர் தயாளன் ராஜேஷ் காலனி சிறுவர் பூங்கா, அருப்புக்கோட்டை பாலவநத்தம், நரிக்குடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், குறையறவாசித்தான்ஊராட்சி துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் பசுமை தமிழகம்இயக்கம் மூலம் உலக பல்லுயிர் தினத்தை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்வை கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து துவங்கி வைத்தார்.மாவட்டத்தில் 16.8 சதவீதம் இருக்கும் பசுமை பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க பசுமை தமிழகம் இயக்கத்தின் பசுமை விருதுநகர் இயக்கத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக நேற்று உலக பல்லுயிர் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை, வேளாண், தோட்டக்கலை, மருத்துவம், நெடுஞ்சாலை, கால்நடை பராமரிப்பு, நகராட்சிகள் உள்ளிட்ட15 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறைகளில் உள்ள அரசு அலுவலக கட்டடங்கள், ஊராட்சி நிலங்கள், நகராட்சி பூங்காக்கள், அரசு மருத்துவமனைகள், விவசாய நிலங்கள் ஆகிய இடங்களில் 3 லட்சம் மரக்கன்றுகள் அரசுத் துறை அலுவலர்களால் நடப்பட்டது.ஊராட்சிகள் உதவி இயக்குனர் விசாலாட்சி , கலெக்டரின் நேர்முக உதவியாளர் விவசாயம் நாச்சியார் அம்மாள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ