மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
14 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
14 hour(s) ago
புகையிலை பறிமுதல்; சிறுவன் உட்பட 4 பேர் கைதுஅருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லுாரி அருகில் எஸ்.ஐ., சுப்புராஜ், போலீசார் ரோந்து சென்ற போது வர்த்தக சங்க தெருவை சேர்ந்த நாராயணன் 35, திருக்குமரன் நகரை சேர்ந்த பாண்டியராஜன் 35, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 15 கிலோ தடை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரி அருகில் எஸ்.ஐ., முத்துராஜ் ரோந்து சென்ற போது, புகையிலை பொருட்களை வைத்திருந்த கலைஞர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் 47, 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து 4 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.அலைபேசி டவர் மாயம்ஸ்ரீவில்லிபுத்துார்: சென்னை ஜி.டி.எல். நிறுவனத்தின் சார்பில், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே ரெங்கநாதபுரம் ராமச்சந்திரபுரத்தை சேர்ந்த போத்திராஜ் என்பவருக்கு சொந்தமான 3 ஆயிரம் சதுரஅடி இடத்தில் அலைபேசி டவர் நிறுவியிருந்தனர். இதனை அந்நிறுவன அலுவலர் ரமேஷ் கண்ணன் 38, அடிக்கடி சென்று ஆய்வு செய்தார். 2022 டிசம்பர் 14ல் ஆய்வு செய்த போது நிறுவப்பட்டிருந்த இடத்தில் இருந்த டவரை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.20 லட்சம். ரமேஷ் கண்ணன் ஸ்ரீவில்லிபுத்துார் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.சேலையில் தீ: பெண் சாவுதிருச்சுழி: திருச்சுழி டி.கரிசல்குளத்தை சேர்ந்த சின்ன குமரன் மனைவி தங்க அழகு 37. இவர் நேற்று முன் தினம் காலையில் மாட்டுத் தொழுவதை சுத்தம் செய்து அங்குள்ள குப்பைக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த போது, எதிர்பாராத விதமாக சேலையில் தீ பற்றியது. காயமடைந்தவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.------பட்டாசு திரி பறிமுதல்சிவகாசி: நாரணாபுரம் ரோடு முருகன் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் 27. இவர் தனது வீட்டில் அனுமதி இன்றி பட்டாசு திரிகள் விற்பனைக்கு வைத்திருந்தார். மாரியப்பனை கைது செய்த கிழக்கு போலீசார் பட்டாசு திரிகளை பறிமுதல் செய்தனர்.வாலிபர் பலிசாத்துார்: துாத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தை சேர்ந்தவர் சக்தி மணிகண்டன் 27. முடி திருத்தும் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு தனியார் மில் எதிரில் உள்ள சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்றார். அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் பலிவிருதுநகர்: ராமநாதபுரம் முதுகுளத்துாரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் 32. இவர் மது பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக விருதுநகர் சூலக்கரையில் செயல்படும் எல்.கே., பவுண்டேஷன் என்ற மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இரவு உணவு உட்கொண்டு விட்டு துாங்க சென்றவர் நேற்று காலை 6:30 மணிக்கு எழுந்து வராததால் அங்கிருந்தவர்கள், அவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.
14 hour(s) ago
14 hour(s) ago