உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

பட்டாசு பறிமுதல்சிவகாசி மாரனேரி காமராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் 33. இவர் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான தகர செட்டில் அனுமதி இன்றி பைப் குழாயில் மண் திரியுடன் முழுமையாக தயாரிக்கப்படாத அட்டைக் குழாய்கள் பதுக்கி வைத்திருந்தார். மாரனேரி போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.-----அரிவாள் வெட்டுசிவகாசி மம்சாபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் பாபு. அதே ஊரைச் சேர்ந்த முருகானந்தம் போலீஸ் வழக்கில் தலைமறைவாக இருந்தவரை கண்டுபிடிக்க பாபு, போலீசாருக்கு தகவல் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகானந்தம் ஏப். 24 ல் பாபுவை தகாத வார்த்தை பேசி கட்டையால் அடித்தார். தடுக்க வந்த பாபுவின் தாயாரையும் கட்டையால் அடித்தார். இது குறித்து மாரனேரி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் முருகானந்தம் பாபுவை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை