உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

கம்பால் தாக்குதல்சிவகாசி மாரனேரியை சேர்ந்தவர் செல்வகுமார் 44. இவர் தனது தோட்டத்தில் இருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த காசி அவரது மருமகன் ஆகியோர் தோட்டத்து வேலியை பிரித்து உள்ளே ஆடுகளை விட்டு மேய்த்தனர். ஏன் என்று கேட்ட செல்வகுமாரை தகாத வார்த்தை பேசி கம்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இருவரையும் மாரனேரி போலீஸா கைது செய்தனர்.----மனைவியை அடித்தகணவர் மீது வழக்குசிவகாசி பூலா ஊரணி வர சக்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் கவிதா 29 இவரது கணவர் கண்ணன். திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் , கண்ணன் அவரது சகோதரர் ராஜா, தாயார் மீனா ஆகியோர் கவிதாவின் தாயாரிடம் சொத்துக்களை பிரித்துக் கொடுக்குமாறு கேட்டும், கவிதாவை அடித்தும் கொலை மிரட்டல் விடுத்தனர். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ