உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பூ மாரியம்மன் கோயில் திருவிழா

பூ மாரியம்மன் கோயில் திருவிழா

சத்திரப்பட்டி, ; சத்திரப்பட்டி அருகே சங்கரபாண்டியபுரம் பூ மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது.சத்திரப்பட்டி வன்னியம்பட்டி ரோட்டில் பூ மாரியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழா ஏப்.21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எலுமிச்சை, பூ, வளையல் உள்ளிட்ட அலங்காரங்களில் வீதி உலா நடந்தது. இளைஞர்கள் சார்பில் தினமும் இசை நிகழ்ச்சி, பெண்கள் கும்மி பாட்டு, பால்குடம், முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு நிகழ்ச்சியாக ஏப். 30 அதிகாலை பூக்குழி திருவிழா நடைபெறும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ