உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பூமாரி அம்மன் கோயில் திருவிழா

பூமாரி அம்மன் கோயில் திருவிழா

சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி அருகே சங்கரபாண்டியபுரம் பூமாரி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பூக்குழி இறங்கி பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இக்கோயில் திருவிழா ஏப்.19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு சப்பரங்களில் வீதி உலா வருதல் நடந்தது. 10ம் நாள் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பூமாரி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளினார். பூக்குழி திருவிழா நேற்று அதிகாலை நடந்தது. சுற்றுப்பகுதியில் இருந்து வந்த திரளான பக்தர்கள் பூ இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். ராஜபாளையம் டி.எஸ்.பி., அழகேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ