மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
13 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
13 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ராஜபாளையத்தில் சமுதாய நிர்வாக பொறுப்பு வகிப்பதில் ஏற்பட்ட விரோதத்தில் முத்துராமனை 35,கொலை செய்த பால்ராஜிற்கு 45,ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ராஜபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ், கூலித் தொழிலாளி. அதே தெருவை சேர்ந்தவர் முத்துராமன், இருவருக்குமிடையே தங்கள் சமுதாய நிர்வாக பொறுப்பு வகிப்பதில் விரோதம் ஏற்பட்டுள்ளது.2014 அக்.24 அன்று காலை முத்துராமனை கத்தியால் குத்தி பால்ராஜ் கொலை செய்துள்ளார். ராஜபாளையம் தெற்கு போலீசார் பால்ராஜை கைது செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் பால்ராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.
13 hour(s) ago
13 hour(s) ago