உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காந்தி நகரில் தனியார் ஒயின் ஷாப் அமைக்க மக்கள் எதிர்ப்பு

காந்தி நகரில் தனியார் ஒயின் ஷாப் அமைக்க மக்கள் எதிர்ப்பு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியில் தனியார் ஒயின் ஷாப் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அருப்புக்கோட்டை நகராட்சி 25 வது வார்டு காந்திநகர் மேம்பாலம் கீழ் மதுரை செல்லும் சர்வீஸ் ரோடு உள்ளது. இங்கு, சாய்பாபா கோயில், மாரியம்மன் கோயில், வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், டூ வீலர் ஷோ ரூம்கள் உட்பட உள்ளன. புறநகர் பகுதியில் இருந்து இந்த ரோடு வழியாகத்தான் செல்வர். புறநகர் பகுதியினர் இந்த ரோட்டை பயன்படுத்தி தான் அருப்புக்கோட்டை நகருக்குள் செல்வர்.இந்த ரோட்டில் தான் நகராட்சி மினி பஸ் ஸ்டாண்ட் உள்ளது. பல தரப்பினர் வந்து செல்லும் முக்கியமான இந்த ரோடு அருகில் தனியார் ஒயின் ஷாப் திறப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.இங்கு ஒயின் ஷாப் அமைந்தால் பெண்கள் இந்த ரோடு வழியாக கோயில்களுக்கு செல்வதில் தயக்கம் ஏற்படும். சுற்றியுள்ள குடியிருப்போர்களுக்கு 'குடிமகன்' களால் பல்வேறு தொல்லைகள் ஏற்படும்.இதை கருத்தில் கொண்டு, இந்த பகுதியினர் இப்பகுதியில் ஒயின் ஷாப் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ஒயின் ஷாப் அமைப்பதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை