உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புண்ணிய நதி தீர்த்த பூஜை

புண்ணிய நதி தீர்த்த பூஜை

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புண்ணிய நதி தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.ஜூன் 2 காலை 7:45 மணி முதல் 8:45 மணி வரை கும்பாபிஷேகம் நடக்கும் இக்கோயிலில் தற்போது தினமும் சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக குமரி முதல் இமயம் வரை உள்ள புண்ணிய நதி தீர்த்தங்கள் நேற்று காலை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிவகங்கை குளத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.பின்னர் ரத வீதி சுற்றி வந்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ரகுபட்டர் தலைமையில் பட்டர்கள் புனித தீர்த்தங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்து மணிகண்டன் தலைமையில் கோயில் பட்டர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ