உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வத்திராயிருப்பில் அறுவடை நேரத்தில் பெய்யும் மழை; கவலையில் நெல் விவசாயிகள்

வத்திராயிருப்பில் அறுவடை நேரத்தில் பெய்யும் மழை; கவலையில் நெல் விவசாயிகள்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகாவில் நெல் அறுவடை நெருங்கியுள்ள நிலையில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.வத்திராயிருப்பில் கான்சாபுரம், கூமாபட்டி, நெடுங்குளம், சேது நாராயணபுரம், வ.புதுப்பட்டி, பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு பகுதிகள் உட்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் கோடை நெல் சாகுபடி தற்போது நடந்து வருகிறது.இதில் பெரும்பாலான வயல்களில் நெற்கதிர்கள் முலைவிடும் நிலையிலும், பல்வேறு வயல்களில் நெற்கதிர்கள் பூத்து அறுவடைக்கு தயாராகும் நிலையிலும், ஒரு சில வயல்களில் அறுவடை செய்துள்ள நிலையும் தற்பொழுது உள்ளது.பெரும்பான் வயல்களில் இன்னும் இரண்டு வாரத்திற்குள் முழு அளவில் நெற்பயிர்கள் அறுவடை செய்யும் சூழலில் கடந்த சில நாட்களாக பெய்யும் மழையினால் வயல்களில் நெற்கதிர்கள் சாய்ந்து விழும் நிலை துவங்கி உள்ளது.இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி வத்திராயிருப்பில் 3.8 மி.மீ., கோவிலாறு அணையில் 7 மி.மீ., பெரியாறு அணையில் 5.2 மி.மீ. மழை பெய்து, அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.கடந்த நான்கு நாட்களாக பெய்த மழையினால் வயல்களில் தண்ணீர் தேங்கி, குளிர்ந்து காணப்படுவதால் பெரும்பாலான வயல்களில் விளைந்த நெற்கதிர்கள் சாய்ந்து காணப்படுகிறது.கொளுத்தும் வெயிலில் தவிக்கும் நிலையில், மழை பெய்து குளிர்ந்த சூழலை ஏற்படுத்துவது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், நெல் அறுவடை நேரத்தில் மழை பெய்வது வத்திராயிருப்பு தாலுகா விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ