இருஞ்சிறை கண்மாய் புனரமைப்பு பணி துவக்கம்
நரிக்குடி : நரிக்குடி இருஞ்சிறையில் கண்மாய் புனரமைப்பு பணி துவக்க விழா கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.மாவட்டத்தில், 3வது பெரிய கண்மாயான இருஞ்சிறை கண்மாய் புனரமைக்க, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். நீர்வளத் துறை சார்பாக ரூ 1 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணியினை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.அத்துடன் தேளியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடம், கொட்டக்காட்சியேந்தலில் ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார்.